'என் காலில் கூட விழுவார்' மா.கா.பா ஆனந்தின் ரகசியத்தை உடைத்த மனைவி
ADDED : 1411 days ago
விஜய் டிவி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட மா.கா.பா.வின் மனைவி அவரது ரகசியங்களை போட்டுடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் மா.கா.பா ஆனந்த். தொடர்ந்து பல வருடங்களாக விஜய் டிவியின் தவிர்க்க முடியாத சின்னத்திரை ஆளுமையாக இருந்து வருகிறார். அவர் தனது மனைவி சூசனுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சவுண்ட் பார்ட்டி' என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 21 அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் சூசனிடம் மாகாபா ஆனந்த் குறித்து வெளியுலகுக்கு தெரியாத விஷயத்தை சொல்லுமாறு தீபக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சூசன், 'தப்பே செய்யலனாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்' என்று சூசன் சொல்கிறார். இந்த வீடியோ மாகாபா ஆனந்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.