உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய சீரியலில் நாயகியாகும் வைஷ்ணவி

புதிய சீரியலில் நாயகியாகும் வைஷ்ணவி

சின்னத்திரை தொடர்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த வைஷ்ணவி அருள்மொழி புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கலர்ஸ் தமிழின் 'மலர்' தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் வைஷ்ணவி அருள்மொழி. தொடர்ந்து சின்னத்திரையில் பல ஹிட் தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த அவர் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வைஷ்ணவிக்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் வெளியாகவுள்ள அந்த தொடரில் ராஜாமகள் புகழ் விஜய் ஹீரோவாகவும், வைஷ்ணவி அருள்மொழி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !