வாழை இலையில் உணவு - தமன்னாவின் உணர்வு
ADDED : 1417 days ago
நடிகை தமன்னாவுக்கு தமிழில் தற்போது பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை பதிவிடுகிறார். இப்போது கடவுள் போன்று வேடமணிந்து வாலை இலையில் உணவு சாப்பிடும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ‛‛வாழை இலையில் உண்ணும்போது தெய்வம் போல் உணர்கிறேன். எளிதானது, சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. மீண்டும் பழைய நிலைக்கு காலம் செல்கிறது'' என பதிவிட்டுள்ளார்.