உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லைகர் படத்தில் நடித்து முடித்தார் மைக் டைசன்

லைகர் படத்தில் நடித்து முடித்தார் மைக் டைசன்

தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே இணைந்து நடித்து வரும் படம் லைகர். ஆக்ஷன், திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா உடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகளை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கி வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மைக் டைசன், விஜய் தேவரகொண்டா உடன் தான் இணைந்து எடுத்துள்ள ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள அனன்யா பாண்டே, அமெரிக்காவில் நடைபெற்ற லைகர் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !