ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தில் இணையும் தில் ராஜு
ADDED : 1507 days ago
ராஜமவுலி இயக்கிய பல படங்களை விநியோகம் செய்திருப்பார்கள் தயாரிப்பாளர் தில் ராஜு . தற்போது ஆர் ஆர் ஆர் படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை ரூபாய் 72 கோடிக்கு வாங்கி இருக்கிறார் . மேலும் தற்போது டைரக்டர் சங்கர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் படத்தை தயாரித்து வரும் தில் ராஜு அடுத்தபடியாக தெலுங்கில் விஜய் நடிக்க இருக்கும் 66வது படத்தையும் தயாரிக்க போகிறார்.
இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இதுவரை ராஜமவுலியின் படங்களில் விநியோகஸ்தராக மட்டுமே பங்குபெற்ற தில் ராஜு முதல்முறையாக இந்தப் படத்தை தயாரிக்கும் கே.எல்.நாராயணன் உடன் இணைந்து இன்னொரு தயாரிப்பாளராக களம் இறங்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.