ஆறுதல் வார்த்தைகள் - செல்வராகவன் நன்றி
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்துஜா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் ‛‛வாழ்க்கை முடிந்தது இனிமேல் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார். வேதனை இன்றி விடியல் இல்லை'' தெரிவித்து இருந்தார் செல்வராகவன்.
இதற்கு இயக்குனர் சேரன் பதில் கொடுத்திருந்தார். அதில், ‛‛சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதராக இருப்போம். சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம் வாருங்கள். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போலவே செல்வா...'' என கூறியிருந்தார்.
அதற்கு நன்றி கூறி உள்ளார் செல்வராகவன். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். தங்களின் ஆட்டோகிராப் உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் என கூறியுள்ளார்.