உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ராம்சரண் - கியாரா நடனம்

வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ராம்சரண் - கியாரா நடனம்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் இரண்டு வேடங்களில் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுரேஷ் கோபி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்து முடிந்து உள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் ராம்சரண்- கியாரா அத்வானி பங்குபெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை பிரமாண்டமாக படமாக்கினார் ஷங்கர் . இதற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ராம்சரண் கியாரா அத்வானி உடன் இணைந்து நடனமாட வெளிநாட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் வந்துள்ளார்கள். ஷங்கர் படங்களில் வழக்கமாக இடம்பெறும் பிரம்மாண்டத்திற்கு இணையாக இந்த படத்தின் பாடல் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக உருவாக்க எண்ணி உள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !