உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மஹா முதல் பாடல் டிச.,4ல் ரிலீஸ்

மஹா முதல் பாடல் டிச.,4ல் ரிலீஸ்

சிம்பு நடித்த மாநாடு படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா படத்தின் முதல் பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !