அரசகுடும்ப வாரிசாக மாறிய நிவின்பாலி
ADDED : 1408 days ago
நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் ஒடிடியில் வெளியான கனகம் காமினி கலகம் படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.. அதனால் அவரது ரசிகர்கள் அவர் நடித்து வரும் துறைமுகம் படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் நடிக்கிறார் நிவின்பாலி.
இந்தநிலையில் சேகர வர்ம ராஜாவு என்கிற படத்தில் நடிக்கிறார் நிவின்பாலி. இதில் அரச குடும்பத்தின் இன்றைய வாரிசாக நடிக்கிறார் நிவின்பாலி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இஷ்க் படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.