ரம்யாவின் கனவு
ADDED : 1408 days ago
நடிகையும் தொகுப்பாளினியுமான, ரம்யா சுப்பிரமணியன், நியூயார்க்கில் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் ஊட்டச்சத்து தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில் நமக்கும் இந்த சமூகத்திற்கும் உதவும் வகையில் ஏதாவது செய்ய நினைத்தேன். ‛பிட்னஸ்'சில் எனக்கு ஆர்வம் இருந்ததால், இந்த படிப்பை தேர்வு செய்தேன். என் கனவு எது என்றால், தென்இந்திய பெண்களை பொறுத்தரை உடல் தோற்ற அழகு, மாதவிடாய் பிரச்சனை, தைராய்டு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கிறது. இதுதொடர்பான புரிதலும், விளக்கமும் பலருக்கு கிடைப்பதில்லை. இந்தவிஷயத்தில் நான் நிறைய உதவ நினை்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.