நாய் சேகருக்காக சதீஷை ஆடவைத்த சாண்டி
ADDED : 1462 days ago
காமெடி நடிகர்கள் எல்லாரும் கதையின் நாயகர்கள் என்கிற போர்வையில் தங்களது ஹீரோ தாகத்தை தீர்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் சதீஷும் கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் நாய் சேகர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் தனது நண்பன் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார் என்பதற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத, அதற்கு அனிருத் இசையமைக்க என படத்திற்கு பூஸ்ட்டான அம்சங்களும் நிறைய இருக்கின்றன.
இந்தநிலையில் இந்தப்படத்தில் சதீஷ் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த பாடலை டான்ஸ் மாஸ்டர் சாண்டி வடிவமைத்துள்ளார். தமிழ்ப்படம்-2வில் சதீஷ் ஆடியது போல காமெடி நடனமாக இருக்குமா இல்லை சீரியசாகவே பொளந்து கட்ட போகிறாரா என்பது படம் வந்தபின் தான் தெரியும்.