உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோல்டன் குளோப் விருதுக்கு செல்லும் ஜெய்பீம்

கோல்டன் குளோப் விருதுக்கு செல்லும் ஜெய்பீம்

சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள விருது கோல்டன் குளோப். இந்த விருதை பெரும் பெரும்பாலான படங்கள் ஆஸ்கர் விருதை பெறும் என்பார்கள். 2022ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 9 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் நடித்திருந்தார்கள். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார், சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்த தகவலை சூர்யாவின் 2டி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !