முகேனின் 'மதில் மேல் காதல்'
ADDED : 1405 days ago
'வெப்பம்' படம் மூலம் அறிமுகமான அஞ்சனா அலிகான் இயக்க, முகேன் ராவ், திவ்ய பாரதி ஜோடியாக நடிக்கும் படம் 'மதில் மேல் காதல்'. பார்த்தவுடன் காதலில் விழும் ஜோடி, காதலின் உறவை தக்க வைத்துக்கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதை உணர்வதே இப்படத்தின் கதை. சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்துாரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், 'கே.பி.ஓய்' புகழ் பாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகேன், ‛வேலன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. முதல்பட வெளியீட்டிற்கு முன்பே அடுத்தபட வாய்ப்பை பெற்றுள்ளார் முகேன்.