உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பைகார் டப்பிங்கில் விஜய்சேதுபதி

மும்பைகார் டப்பிங்கில் விஜய்சேதுபதி

தமிழிலிலேயே கைவசம் அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தனது எல்லையை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக ஹிந்தியிலும் நுழைந்துள்ளார். தற்போது அங்கு மும்பைகார் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மும்பைகார் படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் படமாக வெளியாகிய மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் தான் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார் விஜய்சேதுபதி. இதே விரைவில் வேலைகள் நடந்தால், இந்த மும்பைகார் பாலிவுட்டில் விஜய்சேதுபதியின் முதல் படமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !