இளையராஜா புகார் அளிக்க போவதாக தகவல்
ADDED : 1450 days ago
'காக்கா முட்டை' படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன். தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார். இப்போது 'கடைசி விவசாயி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. ஆனால் படக்குழு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'தன்னை கேட்காமல் இசையமைப்பாளரை மாற்றிவிட்டனர்' என இளையராஜா தரப்பில், இசையமைப்பாளர் சங்கத்தில் முறையிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.