சின்னத்திரையில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்
ADDED : 1417 days ago
அன்பே வா தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் வரை சுமாராக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில், தற்போது திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலின் டிஆர்பியை ஏற்றும் வகையில் அவ்வப்போது சில சினிமா பிரபலங்களும் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமான சுஜா வருணி அன்பே வா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். திருமணத்துக்கு பின் வெள்ளித்திரையில் அதிகமாக தோன்றாத சுஜா வருணி தற்போது இந்த சீரியலில் நடிக்க வந்துள்ளார். அன்பே வா சீரியலில் நடக்கும் நடனப் போட்டியின் நடுவராக சுஜா வருணி நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தப்படியாக படங்களிலும் நடிக்க எண்ணி உள்ளார்.