மகனுடன் மகான்
ADDED : 1502 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் நடித்துள்ள படம் மகான். தாதா - போலீஸ் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் விக்ரம், துருவ் இருவரும் இணைந்து டப்பிங்கை நிறைவு செய்துள்ளனர். இதுதொடர்பான போட்டோவை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தனக்கான இடத்தை போராடி பிடித்துள்ள விக்ரம், தற்போது தன் மகனின் இடத்தை நிர்மாணிக்கவும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இதனிடையே விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் கதைக்களம், வட சென்னையை மையப்படுத்தி உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.