உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள் - செல்வராகவன்

வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள் - செல்வராகவன்

சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள செல்வராகவன், தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்குகிறார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சமீபகாலமாக தனது மனதை பாதித்த பல விசயங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகிறார் செல்வராகவன். சமீபத்தில், ‛‛வாழ்க்கையில் நடக்கும் ஒவ் வொரு பிரச்சினைகளுக்கும் நாம்தான் காரணம் என்று பழி போட்டுக்கொள்ளாதீர்கள். மற்றவர்களின் பாவத்தை நாம் சுமந்தது போதும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனதை குத்தி கிழித்து உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது'' என கூறியிருந்தார்.

இப்போது, ‛‛தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சி னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !