உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குக் ஹீரோவை பார்த்து வியக்கும் நடிகர்கள்

குக் ஹீரோவை பார்த்து வியக்கும் நடிகர்கள்

சினிமாவில் ஹீரோக்கள் தரும் பில்டப்கள் சமயத்தில் சக ஹீரோக்களுக்கே ஷாக் கொடுக்கும். அப்படி ஒரு ஹீரோ என்ட்ரி ஆவதற்கு முன்பே ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பதை பார்த்து நடிகர்கள் வியக்கின்றனர். டிவியில் பிரபலமான குக் நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் அந்த நடிகர். அந்த டிவி நிகழ்ச்சி மூலம் பெண்களிடம் பிரபலமானதால் சினிமா வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஒரு படத்தில் தலை காட்டியவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோவாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை தொடங்கி வைத்தார். முதல் படம் ரிலீசே ஆகலை. அதுக்குள்ளேயே இப்படி ஒரு பில்டப்பா என்று மற்ற ஹீரோக்கள் வியக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !