மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார்
ADDED : 1401 days ago
பழம்பெரும் மலையாள திரைப்பட பின்னணி பாடகர் தோப்பில் ஆண்டோ. நாடகங்களில் நடித்தும், பாடியும் வந்த ஆண்டோ 1970களில் சினிமாவில் நுழைந்தார். பல படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி உள்ளார்.
1982 ம் ஆண்டு கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும், 2010ம் ஆண்டு பிரவாசி பிரணவ த்வனி புரஸ்கார் மற்றும் சங்கம்புழா சம்ஸ்காரிகா கேந்திரம் விருதையும் பெற்றுள்ளார். 81 வயதான அவர் முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.