மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1368 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1368 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1368 days ago
தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணிவண்டி. இதில் உமாபதியின் தந்தையாகவே தம்பி ராமய்யா நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், தேவதர்ஷினி சமஸ்கிருதி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோசஸ் இசை அமைத்துள்ளார், எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாணிக்க வித்யா இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: மதுரையில் வண்டியில் குடிதண்ணீர் சப்ளை செய்யும் இரு இளைஞர்களின் கதை. இவர்களின் வாழ்க்கைக்குள் குறுக்கே வருகிறார் மதுரை மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரி. தமிழ் சினிமாவில் மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் கேரக்டர் வந்துள்ளது. முதன் முதலாக மாவட்ட வருவாய் அலுவலரின் கதையாக இது உருவாகி உள்ளது.
மிகமிக நேர்மையான அதிகாரியான அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வீக்னஸ் இருக்கிறது. அந்த வீக்னஸ் தண்ணிவண்டி இளைஞர்களுக்கு தெரிந்து விடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். பல நடிகைகள் நடிக்க மறுத்த வருவாய் அதிகாரி கேரக்டரில் கன்னட நடிகை வினுதா லால் நடித்திருக்கிறார். என்றார்.
1368 days ago
1368 days ago
1368 days ago