தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை
                                ADDED :  1424 days ago     
                            
                             நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு கடந்த 4ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அங்கிருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்கிற்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முன்பைப் போல அன்றைய தினம் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஒருவர் ஏழு நாட்களுக்கு அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அப்படி எதுவும் செய்யாமல் நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.