மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர்
ADDED : 1399 days ago
மவுனம் பேசியதே, பருத்திவீரன் போன்ற கவனிக்கத்தக்க படங்களை கொடுத்த அமீர், யோகி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அதன் பிறகு யுத்தம் செய், வடசென்னை உள்பட சில படங்களில் நடித்தார். ஆர்யாவுடன் இணைந்து அவர் நடிப்பதாக இருந்த சங்குதேவன் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அமீர் பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இதனை தயாரிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அதர்மம், பகைவன் ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.