மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1371 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1371 days ago
ஜிஎன்ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் கிராண்மா. இதில் சோனியா அகர்வால், சார்மிளா, விமலாராமன் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஷிஜின்லால் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சார்மிளா பேசியதாவது: நான் தமிழுக்கு புதிது இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சந்திக்கிறோம். இடையில் நிறைய மலையாளப் படங்களில் நடித்தேன். இந்த படத்தை தமிழிலும் மலையாளத்திலும் நேரடியாக எடுப்பதுபோல் எடுத்துள்ளார்கள். இந்தப் படப்பிடிப்பு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நடிப்பவர்களை தயாரிப்பு நிர்வாகிகள் தான் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள்.
ஆனால் இந்தப்படத்தில் தேவைப்படும் போது மட்டும் அழைத்து தேவையில்லாதபோது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அந்த அளவிற்கு மன அழுத்தம் இல்லாமல் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. கல்லூரிக் காலங்களில் நண்பர்களோடு ஜாலியாக இருப்பது போல் இருந்தது. ஒரு குடும்பத்தில் பழகியது போல் இந்த படக்குழுவினருடன் பழகியது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.
1371 days ago
1371 days ago