சுதீப்புடன் ஜோடியாக நடிக்க மறுத்த மாடல் அழகி
ADDED : 1445 days ago
பாலிவுட்டை சேர்ந்த கஷிகா கபூர் என்பவர் மாடலிங் உலகில் பிரபலமாகி வருகிறார். நிறைய ஹிந்தி டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர் பெயரில் கபூர் என இருந்தாலும் எந்தவித பாலிவுட் பின்னணியும் இல்லாதவர். பாலிவுட் பட வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த இவர் தற்போது தெலுங்கில் ட்ரூ லவ் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அதேசமயம் கன்னடத்தில் சுதீப் மற்றும் உபேந்திரா இணைந்து நடிக்கும் கப்சா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துவிட்டாராம் கஷிகா கபூர். என்னுடைய அறிமுக படத்திலேயே என்னைவிட இரு மடங்கு வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை நான் விரும்பவில்லை. அது அப்படியே ஒரு முத்திரை என்மீது பதிந்து விடும் என்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்ததற்கு காரணம் கூறியுள்ளார்.