'ஒயிட் பாரஸ்ட் கேக்' - ஜனனிக்கு ரசிகர்கள் கமெண்ட்
ADDED : 1767 days ago
விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜனனி அசோக்குமார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஜனனி, உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். ஜனனி சமூகவலைதளத்தில் அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக ஆரம்பித்துள்ளன. அதை பார்க்கும் சிலர் ஜனனியை ஒயிட் பாரஸ்ட் கேக் என வர்ணித்து வருகின்றனர்.