அகண்டாவுக்கு வரவேற்பு: ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்துக்கு பாராட்டு
ADDED : 1440 days ago
பாலகிருஷ்ணா, பிரயக்ஹா ஜெய்வால், ஜெகபதி பாபு நடித்துள்ள தெலுங்கு படமான அகண்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கி உள்ள இந்த படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ராம்பிரசாத் தான் தமிழில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் மாயோன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அகண்டா வெற்றிக்கு காரணம் படத்தின் பிரமாண்ட காட்சிகள் தான் என்று ராம்பிரசாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதை தொடர்ந்து மயோன் படக்குழுவினர் ராம்பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அகண்டா போன்றே மாயோன் படத்திலும் பிரமாண்ட காட்சிகளை ராம்பிரசாத் வடிவமைத்திருக்கிறார் என்கிறது படக்குழு.