உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெந்து தணிந்தது காடு - சிம்பு வெளியிட்ட அப்டேட்

வெந்து தணிந்தது காடு - சிம்பு வெளியிட்ட அப்டேட்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. கயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப் பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிம்பு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதோடு தனது கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களோடு இந்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விடும் என்றும் அப்படக்குழு வட்டாரங்களில் ஒரு தகவல் செவளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !