சூர்யா படத்தில் பாடிய இரண்டு இசையமைப்பாளர்கள்
ADDED : 1394 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்க மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. பிப்ரவரி 4-ந்தேதி படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக டி.இமானின் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களும் தலா ஒரு பாடலை பின்னணி பாடியிருக்கிறார்கள். விரைவில் இந்த பாடல்கள் வெளியாக உள்ளன.