உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேப்ரியல்லா

சீரியல் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேப்ரியல்லா

கடந்த தமிழ் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் கேப்ரியல்லா. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். இந்நிலையில், 'ஈரமான ரோஜாவே' சீசன் 2வில் கதாநாயகியாக கேப்ரியல்லா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய வெற்றி பெற்ற தொடர். இதன் இரண்டாம் பாகம் தான் வெளியாக இருக்கிறது. கேப்ரியல்லாவுக்கு மற்ற பிக்பாஸ் பிரபலங்களை போல சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் சீரியர் ஹீரோயினாகி இருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !