பேண்டஸி படத்தில் யோகி பாபு
ADDED : 1442 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் ரெஜிஷ் மதிலா இயக்கும் பேண்டஸி படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று(டிச., 7) துவங்கியது. பரத் சங்கர் இசையமைக்க, கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார். தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.