உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேஜிஎப்-2 டப்பிங்கை துவங்கிய சஞ்சய் தத்

கேஜிஎப்-2 டப்பிங்கை துவங்கிய சஞ்சய் தத்

கடந்த 3 வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 22ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.

இந்தநிலையில் தற்போது இந்தப்படத்திற்கான தனது டப்பிங்கை பேசி வருகிறார் சஞ்சய் தத். இந்த தகவலை இயக்குனர் பிரசாந்த் நீல் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னுடைய டைரக்சனில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை கவனித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் கேஜிஎப்-2 படத்தின் மீதி பணிகளையும் கவனித்து வருகிறார் பிரசாந்த் நீல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !