விக்கி கவுசலுக்கு திருமணம் - இதயம் நொறுங்கிய ரம்யா
ADDED : 1401 days ago
இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடியான காத்ரீனா கைப் - விக்கி கவுசல் ஜோடி இன்று திருமணம் செய்ய இருக்கிறார்கள். இந்த திருமண ஏற்பாடுகள் தான் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள பார்வாரா - சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டை ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்று வருகிறது. விக்கி கவுசல் பாலிவுட்டின் இளம் ஹீரோ ஆவார். அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
இந்நிலையில் தான் நடிகையும், விஜேவுமான ரம்யா, இந்த திருமணத்தால் தனது இதயம் உடைந்து நொறுங்கி போனதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில் விக்கி கவுஷல் மற்றும் கத்ரினா இணைந்திருக்கும் படத்தையும் விஜே ரம்யா பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.