மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1391 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1391 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1391 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றுடன் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து பீஸ்ட் படத்தில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் தான் விடை பெற்றுக் கொள்வதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
அந்த வீடியோவில் பூஜா ஹெக்டே கூறுகையில் , பீஸ்ட் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து நடித்தேன். விஜய் ஸ்டைல், நெல்சன் ஸ்டைல் இரண்டும் கலந்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக இருந்தது என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
1391 days ago
1391 days ago
1391 days ago