சிம்பு மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1429 days ago
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சிம்பு திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று(டிச., 11) அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தது. தொடர்ந்து ஓரிரு நாள் மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அவரது ரசிகர்கள், சீக்கிரம் அவர் குணமாகி வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.