மீண்டும் கன்னட படத்தில் நடிக்கிறார் வைபவி சாண்டில்யா
ADDED : 1453 days ago
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வைபவி சாண்டில்யா, மராட்டிய படத்தில் அறிமுகமானர். அதன்பிறகு சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து, சர்வர் சுந்தரம் படங்களில் நடித்தார். இதில் சர்வர் சுந்தரம் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகளும் இல்லை. இந்த நிலையில் துருவா சார்ஜா ஜோடியாக மார்ட்டின் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இதனை அர்ஜூன் இயக்குகிறார். பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட வைபவி அடுத்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.