உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டான் படப்பிடிப்பு நிறைவு

டான் படப்பிடிப்பு நிறைவு

அடுத்து வெளிவர இருக்கும் சிவகார்த்திகேயன் படம் டான். அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். சூரி, பிரியங்கா அருள் மோகன், புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா பிரச்சினைகளால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. கொரோனா தளர்வுக்கு பிறகு படப்பிடிப்புகள் வேகமாக நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !