உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா

கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா


நடிகை சமந்தா ஹிந்தியில் இதுவரை வெப் சீரிஸில் மட்டுமே நடித்திருக்கிறாரே தவிர திரைப்படங்களின் நடித்ததில்லை. அந்தவகையில் முதன்முறையாக ஹிந்தியில் அவர் சல்மான்கானுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சமந்தாவின் காதல் கணவரான ராஜ் நிடிமொரு மற்றும் அவரது கூட்டாளியான டிகே இருவரும் இணைந்து சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்கள் என்கிற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் தான் சமந்தா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம்.

'பேமிலி மேன்' வெப்சீரிஸில் நடித்தபோது தான் இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது இயக்கத்தில் தொடர்ந்து 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்த சமந்தா, அடுத்ததாக தற்போது தயாராகி வரும் 'ரக்த் பிரம்மந்த் ; தி பிளடி கிங்டம்' வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக தான் சமந்தாவை தற்போது ஹிந்தி திரைப்படத்திலும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ் நிடிமொரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !