எனக்கு பிடித்த ஹீரோ!! மீரா கிருஷ்ணனின் வைரல் செல்பி!!
ADDED : 1445 days ago
சின்னத்திரையில் பிரபலமான அம்மா நடிகையாக வலம் வருகிறார் மீரா கிருஷ்ணா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சீரியல் நடித்து வருகிறார். என்ன தான் அம்மா கேரக்டரில் நடித்தாலும் அவர் வயது உண்மையில் 35 தான். இன்ஸ்டாவில் செம ஸ்மார்ட்டாக பதிவுகளை பதிவிட்டு வரும் மீரா, சமீபத்தில் தனது மகளுடன் ஆடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போது தான் சிலருக்கு அவரது உண்மையான வயது தெரிந்தது.
இந்நிலையில் அவர் தற்போது 'எனது கல்லூரி கால கனவு ஹீரோ' எனக்கூறி நடிகர் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் நெட்டிசன்கள் 'கல்லூரி கால ஹீரோவா... அப்ப நீங்க ஆண்ட்டி இல்லையா...90'ஸ் கிட்ஸா' என ஆச்சரியத்துட்டன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.