தங்கையுடன் குத்தாட்டம் போட்ட அர்ச்சனா! வைரல் வீடியோ!!
ADDED : 1397 days ago
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து மிகவும் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு சில நாட்களிலேயே சின்னத்திரையிலும் கம்பேக் கொடுத்தார்.
ஆடல், பாடல் என அனைத்திலும் கலக்கி வரும் அர்ச்சனா அடிக்கடி டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தங்கை அனிதாவுடன் சேர்ந்து செமயாக குத்தாட்டம் ஆடியுள்ள அர்ச்சனாவின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதைபார்க்கும் அர்ச்சனாவின் ரசிகர்கள் அவர் பூரணமாக குணமடைந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.