உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதுதான் முதலும் கடைசியும் ; புனித் பற்றி ஜூனியர் என்டிஆர்

இதுதான் முதலும் கடைசியும் ; புனித் பற்றி ஜூனியர் என்டிஆர்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் ஜனவரி மாதம் பான் இந்தியா ரிலீஸாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் புரமோஷனுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை என மாறி மாறி பயணித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அப்படி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி நெகிழ்ந்து போய் கண்கலங்க பேசினார் ஜூனியர் என்டிஆர். மேலும் கடந்த 2016ல் புனித் நடித்த 'சக்ரவியூகா என்கிற படத்திற்காக தான் பாடிய 'கேலய்யா கேலய்யா என்கிற பாடலை மேடையில் பாடிய ஜூனியர் என்டிஆர், இந்தப்பாடலை பாடுவது இதுவே முதலும் கடைசியும் ஆகும்” என்று கண்கலங்க கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !