ஹனிமூனுக்காக கேரளாவில் முகாமிட்ட அஜித்தின் வில்லன்
ADDED : 1398 days ago
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த வளர்ந்துவரும் நடிகரான கார்த்திகேயா நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 படம் மூலம் புகழ் பெற்ற இவர் கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்த தனது காதலி லலிதா ரெட்டியை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் ஹனிமூன் ட்ரிப் கிளம்பியுள்ள இந்த ஜோடி அதற்காக கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ள இவர்கள் அங்கே உள்ள பொழுதுபோக்கு இடம் ஒன்றில் வில்வித்தை பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை லலிதா ரெட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு மிகவும் பிடித்த இடத்தில் மிகவும் பிடித்த நபருடன் என்று கூறியுள்ளார்.