ஹேக்கான ராதிகாவின் சமூகவலைதளம் மீட்பு
ADDED : 1392 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா. பின்னர் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட து. இதை ராதிகாவின் மகள் அறிவித்தார். ராதிகாவும் தனது மற்றொரு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவலை உறுதி செய்ததுடன் தனது பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகள், செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்தாக பதிவிட்டு அதனுடன் சில படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படம் கவர்ச்சியாக உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது ராதிகாவா இல்லை ஹேக்கரா என குழம்பி போயுள்ளனர்.