உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுத்த அறந்தாங்கி நிஷா

பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுத்த அறந்தாங்கி நிஷா

பட்டிமன்ற பேச்சாளரான அறந்தாங்கி நிஷா விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக போட்டியில் கலந்து கொண்டார். அதுமுதலே விஜய் டியில் பயணித்து வரும் நிஷா தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். கடந்த பிக்பாஸ் சீசனிலும் பங்கேற்றவர், பிறகு படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு சப்போர்ட் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் நிஷா நடித்துள்ளார். நிஷாவின் கதாபாத்திரத்தின் என்ட்ரி பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கதாபாத்திரம் கெஸ்ட் அப்பியரன்ஸா அல்லது கேரக்டர் ரோலா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !