உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா என் கடவுள், ரஜினி என் தலைவர் : தனுஷ்

இளையராஜா என் கடவுள், ரஜினி என் தலைவர் : தனுஷ்

தனுஷ நடித்துள்ள அட்ரங்கி ரே ஹிந்தி படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் தனுஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையாராஜாவின் இசை. இளையராஜா என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே.

இந்த படத்தின் ஹீரோயின் சாரா அலி கான் என்னை தலைவா என்று அழைத்தார் தலைவர் ஒருவர் மட்டுமே. அது ரஜினிதான். என்னை அப்படி கூப்பிட வேண்டாம் அதனை ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாராவிடம் லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதன் இயக்குநருக்கே கிடைக்கும். எனவே நான் ஒரு இயக்குநராக விரும்புகிறேன்.

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !