உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் இந்தி டப்பிங்கை முடித்த ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் இந்தி டப்பிங்கை முடித்த ஜூனியர் என்டிஆர்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மும்பை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் இந்தி டப்பிங்கையும் தற்போது முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்தி மற்றும் தெலுங்கு தவிர்த்த தென்னிந்திய மொழிகளில் இந்தப்படத்தின் மூலமாக அழுத்தமாக காலூன்றி விடவேண்டும் என்கிற முனைப்பில், கன்னடம் தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் ஜூனியர் என்டிஆரே பயிற்சி எடுத்து டப்பிங் பேசியுள்ளாராம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !