விஜய் சேதுபதி படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
ADDED : 1400 days ago
சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு கதைகள் படங்கள் உருவாகி வரும் நிலையில், சில கிரிக்கெட் வீரர்கள் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள். தமிழில் பிரெண்ட்ஷிப், டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்தார் ஹர்பஜன் சிங். அவரைத் தொடர்ந்து விக்ரமின் கோப்ரா படத்தில் இர்பான் பதான் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் இன்னொரு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.