நீலிமாராணியின் வைரல் போட்டோஷுட்!!
ADDED : 1393 days ago
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக அரண்மனை கிளி தொடரில் நடித்து வந்தார். அதன்பின் தனிப்பட்ட காரணங்களுக்காக அதை விட்டு விலகினார். இதனையடுத்து சீரியல் புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பித்து பல சீரியல்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷூட் பயங்கர வைரல் ஆகிய நிலையில், தற்போது மேற்கத்திய நாடுகளின் ராணி போல் உடையணிந்து மற்றொரு போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்..