புது கார் வாங்கிய சபரி!! குவியும் வாழ்த்துகள்
இந்த வருடம் யாருக்கு எப்படி இருந்ததோ? ஆனால் சின்னத்திரை நடிகர்களுக்கு நல்ல காலமாகவே இருந்துள்ளது. தொலைக்காட்சி பிரபலங்கள், அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து காரை வாங்கி குவித்து வருகின்றனர். அந்த வகையில் புகழ், சரத், மணிமேகலை, ஆல்யா மானசா, ஷிவானி என வரிசையாக கார் வாங்கி இருந்தனர். தற்போது அந்த லிஸ்டில் சபரியும் இணைந்துவிட்டார்.
விஜய் டிவியின் 'வேலைக்காரன்' தொடரில் நாயகனாக நடித்து வருபவர் சபரி. இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சாகவில்லை என்றாலும் சபரி மற்றும் நாயகி கோமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சபரி தனது நீண்ட நாள் ஆசையான மஹிந்திராவி 'தார்' மாடல் காரை வாங்கி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் ஆர்ஜே, வீஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என படிப்படியாக வளர்ந்த சபரி தற்போது கார் வாங்கியிருக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என கனவோடு உழைத்து வரும் அவருக்கு, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.