ரசிகர்களே வெளியிடும் ராதே ஷ்யாம் டிரைலர்
ADDED : 1386 days ago
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ஐரோப்பாவை பின்னணியாக கொண்ட காதல் கதையில் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 14ல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் படத்தின் டிரைலரை பிரபாஸின் ரசிகர்களே வெளியிட உள்ளனர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பிரபாஸின் ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம்.
இந்திய சினிமா வரலாற்றில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.